தமிழ் கட்சிகளின் அக்கறையின்மையே வன்னியில் பெரும்பான்மை இனக் கட்சிகள் வெற்றிகொள்ள காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, April 19th, 2018

தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்கும் முயற்சியில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டது போல அக்கறை செலுத்தாமையே பெரும்பான்மைக் கட்சிகள் வன்னியில் வெற்றிகொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கில் குறிப்பாக வன்னிப் பகுதியில் தேசியக் கட்சிகள் அதிகப் படியான ஆசனங்களை பெற்று ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியுள்ளன.

இதற்கான அடிப்படைக் காரணம் என்னவெனில் தமிழ் கட்சிகள ஒன்றுமையானதும் ஆக்கறையுடையதுமானதமான செயற்பாட்டை குறித்த பிரதேசங்களில் ஆட்சி அமைப்பதற்கா காட்டவில்லை என்பதெயாகும்.  இதனால்தான் வன்னிப் பகுதியில் பெரும்பான்மை இனக் கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: