தேவாவும் பிரபாவும் த. தே. கூ வும்!… அனுபவத்தொடர்,….

Monday, January 3rd, 2022

இந்த அனுபவத்தொடர் குறித்து வந்து சேரும் வாழ்த்துக்களுக்கும்,. பாராட்டுகளுக்கும் நன்றி!விமர்சிப்பவர்களும் சிலர் இருப்பதாக தெரிகிறது.அவைகளுக்கும் உரியபடி நியாயமான தெளிவுரைகள் விரைவில் கிடைக்கும், காத்திருங்கள்,..தேவா வேறு,.. பிரபா வேறு,..ஈ.பி..டி.பி வேறு கொள்கை, புலிகள் வேறு கொள்கை இன்று பிரபாவின் புலிகள் இயக்கத்தை தத்தமது தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தி வரும் த. தே. கூ வேறு கொள்கை!மூன்று தரப்பும் ஒன்றல்ல,..இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்ட போதும் சரி,.இந்தியப்படை இலங்கையில் இருந்த போதும் சரி தேவா நாட்டில் இருந்திருக்கவில்லை. அதன் நன்மை தீமைகள் எதுவாயினும் அதில் தனக்கு எந்த வித சம்பந்தமும் இல்லையென தேவாவே வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். 1986 தமிழரின் வரலாற்றில் ஓர் இருண்ட யுகத்தின் ஆரம்பம் என்று சொல்லலாம்,..பிரபாவின் புலிகள் இயக்கம் சகோதர படுகொலைகள் மூலம் தமிழர் உரிமை போராட்டத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்க தொடக்கி விட்டார்கள். அதே காலத்தில் மாபெரும் மக்கள் இயக்கமாக திகழ்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திற்குள் உள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன.உட்பகை வேரறுக்கும் அல்லவா,..அதை அன்று பலரும் உணர்ந்திருக்கவில்லை.ஆனாலும் அதை உணர்ந்து ஆரம்பம் முதலே தேவா செயற்பட்டுக்கொண்டிருந்தார். இயக்கங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றினால் முதலில் அவைகள் பேச்சு வார்த்தை மேசைக்கு வர வேண்டும்.மாறாக அந்த முரண்பாடுகள் சுவரொட்டிகளாக சுற்று மதில்களில் வந்து விடக்கூடாது.ஆயுதங்களால் மோதிக்கொள்ளவும் கூடாது,..இதுவே அன்றும் தேவாவின் விருப்பமாக இருந்தது.பிரபா, மற்றும் தேவாவின் சகாவான நாபா உட்பட தலைமைகள் அப்போது தமிழகத்தில் தங்கியிருந்தனர்.இயக்கங்களுக்கு உள்ளேயும், இயக்கங்களுக்கு இடையிலும் தோன்றிய முரண்பாடுகளை பேசித்தீர்க்கும் நோக்கில் தேவா 1986 நடுப்பகுதியிலேயே இந்தியா சென்று விட்டார். தேவா தமிழ் நாட்டில் தங்கியிருந்த போதுதான் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானது. இந்தியப்படை வெளியேறி சென்று கொண்டிருந்த போதே தேவா தன் தோழர்களோடு நாடு திரும்பினார். இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைகளில் ஈ.பி..டி.பி பங்கெடுப்பதற்கான உரிமை ஈ. பி.ஆர். எல்.எவ் இயக்கத்தாலேயே மறுக்கப்பட்டமை வேறு கதை, இது ஓர் கசப்பான வரலாறு,..அப்போது தேவாவின் தலைமையில் ஈ.,பி.டி.பி கட்சி உருவாகி விட்டது,..கட்சியை பதிவு செய்யும் வேலைகள் மெல்ல மெல்ல ஆரம்பித்து விட்டன,ஆனாலும் ஈ.பி.டி.பி இலங்கை அரசுடனோ அன்றி இந்திய படையினருடனோ உறவுகளை அப்போது கொண்டிருக்கவில்லை. சாவகச்சேரி கல்வயலில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் தேவாவின் சிறிய தாயார். அவரது பெயர் விஜியராயன் பராசக்தி,,,தனது சகாவான இராகவன் என்பவருடன் தனது சிறிய தாயாரை தனது தனிப்பட்ட உறவின் நிமிர்த்தம் சந்திக்க சென்றார் தேவாவின் தம்பி பிரேமானந்தா.இருவரையும் பிரபாவின் புலிகள் இயக்கம் கடத்தி சென்று காணாமல் ஆக்கிவிட்டனர்.இருவரும் காணாமல் ஆக்கப்பட்டதை அடுத்து அந்த பனந்தோப்பில் இருந்த கோயிலில் இருந்து அலறல் சப்தம் கேட்டது.அது கேட்டு தேவாவின் சிறிய தாய் பதறிப்போனார்.இருவருக்கும் இதுவரை என்ன நடந்தது என்பது தெரியாது,..செய்தியறிந்த தேவாவிற்கு சிலர் ஆலோசனை வழங்கினர்,..அப்போது பிரபாவின் உறவினர்கள் தமிழ் நாட்டில் தங்கியிருந்தனர்,.. ஈ.பி.டி,பி யின் அலுவலம் இருந்தது கே,கே. நகரில்,..அந்த அலுவலகத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்திலேயே பிரபாவின் உறவினர்கள் தங்கியிருந்தனர்.அதில் பிரபாவின் சகோதரியும் ஒருவர்,இதேவளை சென்னையில் தங்கியிருந்தார் அண்மையில் காலஞ்சென்ற மூத்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன்.அவரது வீட்டில் உரேழுவை சேர்ந்த இராசையா என்பவரும் தங்கியிருந்தார். இராசையா வேறு யாருமல்ல, அவரே புலிகள் இயக்கத்தின் முக்கிய ஒருவரான திலீபனின் தந்தை.உறவுக்கு உறவுகளை பழி வாங்கலாமே என்று தேவாவிடம் சிலர் எடுத்துரைத்தனர்.எய்தவன் யாரோ இருக்க,. அம்புகளையும் அப்பாவிகளையும் பழி வாங்குதல் நல்லதல்ல என்றார் தேவா. தேவா நினைத்திருந்தால் அந்த பழிவாங்கலை சுலபமாகவே செய்து முடித்திருக்கலாம். பிந்நாளில் உறவுக்கு உறவுகளை பழி வாங்குங்கள் என்று தேவாவிடம் சொன்னவர்களே தேவாவின் மனிதநேய பண்புகளை நினைத்து பாராடினர். தேவாவின் தந்தை திரு கதிர்வேல். அவர் அப்போது வயோதிப வயதில் கொழும்பில் தங்கியிருந்தார். தனது மகன் பிறேமன் புலிகள் இயக்கத்தால் கடத்தப்பட்ட செய்தியறிந்து துடிதுடித்துப்போனார். தனது மகன் பிறேமன் உயிருடன் இன்னமும் இருப்பதாகவே அவரது வயோதிப வயது அவரை சிந்திக்க வைத்தது,.தேவா, மற்றும் பிறேமனின் தந்தை சாதாரண ஒரு மனிதரல்ல,..இது குறித்த விபரங்கள் தொடரும்,..சரி அது இருக்கட்டும்,..எனது உட் பெட்டியில் வந்து சிலர் தகவலுக்கு மேல் தகவல்கள் அனுப்புகின்றனர்,.தமிழர் விடுதலைக்கூட்டணி 77 இல் அல்ல 76 இலேயேஉருவாகி விட்டதாம்,..76 இல் இல்லைப்பாருங்கோ அது 70 இல் நடந்த தேர்தல் தோல்விகளை அடுத்து 72 இலேயே 77 தேர்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு விட்டது,..அதுதான் இதில் சொல்லப்பட்டது,..கம்மாலையில் நின்று கொண்டு கறல் ஊசிக்கு விலை பேசுதல் தகுமோ?..அடுத்த அனுபவத்தொடரில் சந்திப்போம்!-அனுபவ புத்திரன்-

Related posts: