ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 7

Wednesday, March 9th, 2016

பல்வேறு பெருமைகள் கொண்ட

தோழரின் பெரிய தந்தையார்
கே. சி. நித்தியானந்தா அவர்களைக் காண
பலரும் வருவதுண்டு.

இப்படித்தான் உமா மகேஸ்வரனுடனான சந்திப்பும் தோழருக்கு
ஏற்பட்டது!
இது பற்றி தோழர் குறிப்பிடுவார் –

‘உமா மகேஸ்வரனை நான் முதலில்
சந்திப்பதற்குக் காரணமானவரும்
எனது பெரிய தந்தையே.
ஒழுக்காற்று விசாரணையொன்று தொடர்பில்
ஆலோசனைகளைப் பெறுவதற்காக உமா மகேஸ்வரன்
எனது பெரிய தந்தையைச் சந்திப்பதற்காக
கொழும்பு, வெள்ளவத்தை
பிரான்ஸிஸ் வீதியிலிருந்த எங்களது வீட்டிற்கு வந்தார்.

அன்றுதான் நான் முதன் முதலில்
உமா மகேஸ்வரனுடன் கதைத்தேன்!

எமது இந்த சந்திப்பும், கலந்துரையாடலும்
நீண்ட காலத்தைக் கொண்ட ஒரு வேலைத் திட்டத்தின்
ஆரம்பமாகுமென எனக்குள் ஓர் எண்ணம்
அப்போதே ஏற்பட்டது!’

பிற்காலத்தைய அவர்களது செயற்பாடுகள் குறித்து
தோழருக்கு அப்போதே ஓர் உணர்வு
தோன்றியிருந்தது!
நில அளவையாளரான உமா மகேஸ்வரன்
தோழரின் உறவினருமாவார்!

தோழர் தனது பாடசாலைக் கல்வியை
யாழ்ப்பாணம், மத்தியக் கல்லூரியில் கற்றவர்.
கல்வி கற்ற காலத்திலேயே அவருக்குள்
புரட்சிகரமான சிந்தனைகள் தோன்றியிருந்தன!
அந்த சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும்
அவர் பின் நிற்கவில்லை!

மாணவராக இருந்த தோழர்
தனது 15வது வயதில்
பாடசாலை மாணவர்களுடன் இணைந்து
முதன் முதலில் ஒரு போராட்டத்தில் இறங்கினார்!

இந்த போராட்டம் பற்றி தோழர்
இப்படிக் கூறுவார் –

‘1970ம் வருடம்.
அப்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட
பல்கலைக்கழக தரப்படுத்தலுக்கு எதிராக
யாழ்ப்பாணத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன!
ஏனைய மாணவர்களுடன் இணைந்து நானும்
மிகுந்த ஆர்வத்துடனும், அக்கறையுடனும் அதில் கலந்துகொண்டேன்!
நாங்கள் வீதிகளில் இறங்கி
பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம்! கொடும்பாவிகள் எரித்தோம்!
எமது எதிர்ப்பை அரசுக்கு அச்சமின்றி
வெளிப்படுத்தினோம்!

அநீதிக்கு எதிராக எவ்வித அச்சமுமின்றி, துணிவுடன்
எழுந்து நிற்க வேண்டுமென்ற எண்ணம்
மீண்டும் மீண்டும் எனது மனதில்
தோன்ற ஆரம்பித்தது இந்த சந்தர்ப்பத்தில்தான்!’

தோழரின் வாழ்க்கையில் மிக முக்கியமான
ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு
இந்தச் சந்தர்ப்பமே ஓர்
அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்டது!

தமிழ்ச் சமூகத்தில் பல வகையிலும்
பாதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவர்கள்
இளைஞர், யுவதிகள் அனைவரும்
ஓர் அமைப்பு ரீதியில் இணைவதற்கான ஆரம்பம்
இந்தக் காலக் கட்டத்திலேயே உருவானது!

அந்த வகையில்
தமிழ் மாணவர் பேரவை உருவானது!

சத்தியசீலன், அரியரத்தினம், வில்வராஜா,
சபாலிங்கம், கனகசுந்தரி, சந்திரசேகரம், பூபதி
போன்றோர் இதன் ஆரம்பகர்த்தாக்களாவர்!

(தொடரும்)

Related posts: