ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 9

Thursday, March 17th, 2016

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தனது 14, 15 வயது முதலே
இடதுசாரிக் கொள்கையின் பிடிப்புடன் வளர்ந்தவர்!
தந்தையும், அவரது பெரிய தந்தையும்
அவரது மாமனார் எஸ். சிவதாசன் அவர்களும்
இந்தக் கொள்கையில் கொண்டிருந்த உறுதி
தோழரின் இரத்தத்தில் ஊறி
அவரது வளர்ச்சியுடன் அது வீறுகொள்ளலாயிற்று!

இந்த வயதில் தோழர் மாணவர் அமைப்புகளுடன்
இணைந்து செயற்படத் துடித்ததை
அவரது தந்தையார் உன்னிப்பாக
அவதானித்தே வந்தார்.

அவ்வாறான நிலையில் தந்தையார்
தனது மகனுக்கு எவ்விதத்
தடைகளையும் விதிக்கவில்லை!
மாறாக –
மகனுக்கு முன்மாதிரியாக நடந்து கொண்டார்!

‘எந்தவொரு உண்மையான போராளியும்
தனது தந்தையிடமிருந்து முதலில்
போராட்டத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என
எழுத்தாளர் ஜெயகாந்தன் அடிக்கடிக் கூறுவார்!

இந்த வாய்ப்பு போராளிகளான பலருக்குக்
கிட்டியதாக இல்லை!
அதனாலோ தெரியாது அவர்கள் எதையும்
எட்டியதாக இல்லை!

தனது தந்தையின் இந்த வழிகாட்டல் பற்றி
தோழர் ஒருமுறை கூறியிருந்தார் –

‘எனது தந்தை இடதுசாரி கொள்கையினூடாக
சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப
கடுமையாக உழைத்ததை என்னால்
கண்டுகொள்ள முடிந்தது!

அவரிடமிருந்து நான் பெற்ற பயிற்சியே
எனது பாடசாலை காலத்தில்
மாணவர் அமைப்புகளில் ஈடுபட
உறுதுணையாக இருந்தது!”

யாழ்ப்பாணத்தில்
பாடசாலை மாணவர்கள் சிலர்
சில எதிர்ப்பு நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வருவதை தோழரின் தந்தையார்
உன்னிப்பாக அவதானித்து வந்தார்.

அதேநேரம் –
இளைஞர்கள் தமது உரிமைகள் தொடர்பில்
அமைப்பு ரீதியாக உருவாகி வந்ததையும்
அவர் அவதானித்தே வந்தார்!

அதுபோன்றே –
இளைஞர்களது எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு
பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டுவந்த
அடக்கு முறைகள் – தடைகள் குறித்தும்
அவர் அவதானிக்காமலில்லை!

எனினும் –
தோழர்களான
பிடெல் கெஸ்ட்ரோஇ சே குவேரா
வாசுதேவ நாணாயக்கார போன்று
உயர் கல்வியை முடித்த பின்னே
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
போராட்ட வாழ்வில் ஈடுபட வேண்டும் என
தந்தையார் எண்ணினார்!

அந்தக் கால கட்டத்தில்
யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியில்
தோழருடன் ஒன்றாகப் படித்துக்கொண்டிருந்த
உருத்திரகுமாரன் –
(தற்போது நாடு கடந்த தமிழீழத்தின்
பிரதமாராக இருக்கிறார்)
ரெங்கன் தேவராஜன் –
(சட்டத்தரணியாக தற்போது
யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்)
போன்றவர்கள் உயர் படிப்புக்காக
வெளிநாடு சென்றனர்!

இவர்களைப் போல்
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும்
வெளிநாடு சென்று உயர் கல்வியைத்
தொடர வேண்டும் என்பதற்காக
தோழரின் தந்தையார்
தோழரை கொழும்பிற்கு அழைத்து வந்தார்!

என்றாலும் –
அப்போது தமிழ் மக்களுக்கெதிரான பிரச்சினைகள்
கூர்மையடைந்திருந்த நிலையில் –
கல்வியில் தனக்கு விடியலைத் தேடுவதைவிட
எமது மக்களுக்கான விடியலைத் தேடுவதே
முக்கியமெனப்பட்டது தோழருக்கு!

தான் உயர் கல்வியை முடிக்கும் வரையில்
தனது சமூகத்தின் மீதான பாதிப்புகள்
ஒதுங்கி நிற்கப் போவதில்லை –
நாளுக்கு நாள் அது
வளர்ந்து கொண்டே வரும் என்பதை
உணர்ந்த தோழர்
போராட்டமே தனது வாழ்க்கை
என முடிவு செய்தார்!

தோழர் கொழும்பில் வசிக்க வந்த நிலையில் –

அடக்கு முறைகளுக்கு எதிராக
எழுந்து நிற்க வேண்டுமானால்
தற்பாதுகாப்பு முக்கியமெனக் கூறி –
தற்பாதுகாப்பின் அவசியம் குறித்து
தோழரின் தந்தையார் தோழருக்கு உணர்த்தினார்!

அவர் தோழர்மீது அளவுகடந்த
அன்பு கொண்டிருந்தார்!
தோழரின் செயற்பாடுகள் மீது
அப்போதே நம்பிக்கைக் கொண்டிருந்தார்!
(தொடரும்)

Related posts: