ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 4 – ஈழ நாடன்

Saturday, March 5th, 2016


தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது
போராட்ட, அரசியல் வாழ்க்கை 
பற்றிய இந்த இதிஹாச ஆவணம்
ஈழத் தமிழர் போராட்ட இதிஹாசத்தினதும்
மக்களது சமூக, அரசியல், பொருளாதார வாழ்வினதும்
ஒரு காலகட்ட நிஜப் பதிவுகளாகும்!

அமைச்சுப் பதவிகளை தோழர் வகித்திருந்த போதிலும்
உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டும்
தோழர் அவற்றில் 
ஒரு போதும் குடீயேறியதில்லை 
சென்று 
அந்த இல்லங்களைப் பார்த்ததுகூட இல்லை!

கொழும்பு, பம்பலப்பிட்டி, லெயார்ட்ஸ் வீதியில்
அமைந்திருக்கிறது
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தற்போது தங்கியிருக்கும் இல்லம்!

1995ம் வருடம் புலிகள் கொழும்பில் மேற்கொண்ட
முதலாவது கெரில்லாத் தாக்குதல்
தோழர் குடியிருந்த திம்பிரிகஸ்யாய
வீட்டின் மீதே நடத்தப்பட்டிருந்தது!
அதன் பின்னர்
தோழர் குடிவந்த இல்லம் இது!

லெயார்ட்ஸ் வீதியிலுள்ள 
இந்த இல்லத்திற்குள் பிரவேசித்து
வருவேற்பறைக்குள் வந்ததும்
எங்களை வரவேற்பது 
பல தோழர்களது புகைப்படங்கள்!

சிரித்தபடி கைகூப்பி வரவேற்பதற்கு 
அவர்கள் இப்போது உயிருடன் இல்லை!
நாங்கள் உயிர் வாழ அவர்கள் தங்களது
உயிர்களைத் தியாகம் செய்தவர்கள்!

அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது
ஒரு கால கட்டத்தின் பயங்கரத்தை
எவரும் இலகுவில் உணர்ந்து கொள்ளலாம்!

எதற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு
பதில் கூற இன்று
கொன்றவர்களும் இல்லை!
கொல்லச் சொன்னவர்களும் இல்லை!

இந்த புகைப்படங்களில் காணப்படுவோர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 
அரசியல் செயற்பாட்டாளர்கள்!

யுத்த காலத்தில் நாட்டில் இரு தரப்பினராலும்
விதிக்கப்பட்டிருந்த பல்வேறு தடைகளுக்கு மத்தியில்
உண்ணக் கூட வழியின்றி 
ஊமைகளாக்கப்பட்டிருந்த எமது குடா நாட்டு மக்களுக்கு
உண்ணவும், நிம்மதியாக உறங்கவும்,
பாதுகாப்பாக 
அடிப்படை வசதிகளுடன் வாழவும்
தோழர் அயராது மேற்கொண்ட முயற்சிகளுக்கு
பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் செயற்பட்டவர்கள்!

இன்று அவர்கள் எம்மிடம் இல்லை!
இங்கு புகைப்படங்களில் நிழல்களாகவும்,
அங்கு மக்களின் மனதுகளில் நிஜங்களாகவும்
அவர்கள் இருக்கிறார்கள்!

இந்த தோழர்கள் பிறந்தஇறந்த திகதிகள் என்பன
அந்தந்தப் புகைப்படங்களில் காணப்படுகின்றன.

சில புகைப்படங்களில்
தோழர்களைப் பார்க்கும்போது
ஆங்கிலத் திகில் திரைப்படமொன்றின்
சுவரொட்டியே ஞாபகத்திற்கு வரும்!
சில்வெஸ்ரர் ஸ்டெனொலியின்ரம்போ
ஆர்னோல்ட் ஸ்வசெனகரின்கமாண்டோ
போன்ற திரைப்படங்களின் சுவரொட்டிகள் போன்ற காட்சிகள்!

இதனிடையே இந்த அறையின்
இடது பக்கச் சுவரில்இன்னொரு புகைப்படம்!
இடுப்பில் இரண்டு கைத் துப்பாக்கிகள்!
மிடுக்கான தோற்றம்! 
கூரிய பார்வை!
மக்கள் காவலன் நானேஎன
சொல்லாமல் சொல்லும் கம்பீரமான நேர்மையுடன்
தோழரின் புகைப்படம்!

தோழரின் இளம் பருவத் தோற்றம்!

(தொடரும்)

 

Related posts: