தேவாவும், பிரபாவும், த.தே. கூ வும் – தொடர் 4

Monday, January 10th, 2022

அனுபவத்தொடர்!…

தாயின்றி தன்னிடம் வளர்ந்த மகன் பிரேமானந்தா
புலிகளால் கடத்தி செல்லப்பட்டு காணாமால் ஆக்கப்பட்டதும் கலங்கிப்போனார் தந்தை கதிரவேல்.

எஸ். கதிராவேல் அரசியல் பரப்பில் பலராலும்
அறியப்பட்டவர், கதிர் என்றும் அவரை அழைப்பர்.

மாபெரும் தொழிற்சங்கம் ஒன்றின் தலைமை
நிர்வாக உறுப்பினர். அந்த தொழிற்சங்கம் இலங்கை அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்.

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என
முதன் முதலில் வலியுறுத்திய இலங்கை கம்யூனிஸ்
கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரே எஸ். கதிரவேல்.

இன்று வரை கம்யுனிஸ் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து வரும் டி.யு. குணசேகரா அவர்கள்
ஒரு விடயத்தை அடிக்கடி கூறுவார்.

தன்னை கம்யுனிஸ் கட்சியில் இணைத்துவிட்டவர் எஸ். கதிரவேல் அவர்களே என்றும் அவர் மும்மொழிகளிலும் நெருப்பெறிந்த பேச்சாளர் என்றும் தேவாவின் தந்தை கதிரவேலுவை டி.யு. குணசேகரா இப்பொழுதும் பாராட்டி பேசுவதுண்டு.

1950 களின் ஆரம்பத்தில் இலங்கை கம்யுனிஸ் கட்சியால்
ஒரு தொழிற்சங்க பத்திரிகை வெளியிடப்பட்டது.
அதன் பெயர் சுநன வயிந (சிவப்பு நாடா).

அந்த பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் தேவா மற்றும்
பிறேமனின் தந்தை எஸ். கதிர்வேல்.

மும்மொழிகளிலும் ஆற்றல் மிக்க தேவாவின் தந்தை கதிரவேல், இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபானத்தில் பணி புரிந்தவர்.

தேவா, மற்றும் பிறேமனின் தாயார் மகேஸ்வரி
யாழ் மத்திய கல்லூரியின் ஆசிரியையாக இருந்தவர்,

சிறு வயதிலேயே தாயார் மகேஸ்வரியை இழந்த தேவா பிறேமன் மற்றும் சகோதரர்கள் கதிரவேலின் சகோதரி பரமேஸ்வரியின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்து வந்தனர்,..

பிறேமன் புலிகள் இயக்கத்தால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட செய்தியறிந்த அவரது வளர்ப்புத் தாயார் பரமேஸ்வரியும் தந்தையார் கதிரவேலும் கன்றை இழந்த கறவை பசு போல் துடி துடித்தனர்.

பிறேமன் உயிருடன் இருகிறார் என்ற நப்பாசையில்
பிறேமனின் தந்தையும், வளர்ப்பு தாயாரும், அவரது ஏனைய சகோதரர்களும் தேவாவிடம் அது பற்றி அடிக்கடி பேசுவார்கள்.

பிறேமனை தேடிப்பார் என்ற வார்த்தைகளே தேவாவின்
காதுகளை துளைத்துக்கொண்டிருந்தன,..

புலித் தலைமையின் குணமறிந்த தேவா தன் தம்பி பிறேமன்
புலிகள் இயக்கத்தால் கொல்லப்படிருக்கலாம் என உணர்ந்திருந்தார்,

ஆனாலும்,. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த தேவா பிறேமன் புலிகள் இயக்கத்தால் கொல்லப்பபட்டிருக்கலாம் என்ற விடயத்தை இறுதி வரை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

அதேவேளை காணாமல் போனோரின் உறவுகள் பலரும்
தேவாவின் வாசல் தேடி வந்து தமக்கு நீதி பெற்று தாருங்கள்
என மன்றாடுகின்றனர்.

அவர்களிடம்,. கூறும் வார்த்தைகள் இவைகள்,..

நானும் உங்களில் ஒருவன்,.
காணாமல் போனவர்களின் உறவுகள் தாங்கும்
வலிகளையும்,. வதைகளையும் நான் உணராதவன் அல்ல,..

எனது சொந்த சகோதரன் மட்டுமன்றி,. என்னுடன் கூட இருந்த உயிருக்கு உயிரான என் உறவுகள் பலர் (தோழர்களும்) கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்கள்,..

அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல்
உங்களைப்போல் நானும் வலிகளை சுமப்பவன் என
கூறும் தேவா,

காணாமல் போனோரின் உறவுகளின் கண்ணீருக்கு தான்
பரிகாரம் பெற்று தருவதாகவே அவர் அந்த முயற்சியில்
இன்றுவரை ஈடுபட்டு வருகிறார்,.

1995 இல் சந்திரிகா அரசு ஆட்சியில் இருந்தது.
யாழ் குடாநாட்டை விடுவிக்க சூரியக்கதிர் என்ற இராணுவ
நடவடிக்கையில் அன்றைய அரச படைகள் ஈடுபட்டன,.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தேவா என்ன
கூறி வர்கிறார்?..

அழிவு யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்,.
அதற்கு ஒரு கை மட்டும் ஓசை எழுப்பாது.
இரு கைகளும் இணைந்தாலே ஓசை எழும்.

இரு தரப்பும் இணைந்து அழிவு யுத்தத்தை நிறுத்தாவிட்டால்
கானாமல் போதல்,. கைதுகள்,. கடத்தல், மனிதப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடக்கவே செய்யும்!

இவ்வாறு அன்றைய தனது நாடாளுமன்ற உரையின் ஊடாகவும் தேவா பகிரங்கமாக தெரிவித்து வந்தார்,..

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க முன்னர்
இனப்பிரச்சனை தீர்விற்கான அனுபவங்களை கற்றுக்கொள்வதற்காக வெளிவேறு நாடுகளுக்கு சந்திரிகா அரசு நாடாளுமன்றக்குழுக்களை அனுப்ப தீர்மானித்திருந்தது.

அதன் படி,.. வட அயர்லாந்து பிரச்சினை குறித்து கற்றுக்கொள்ள அயர்லாந்திற்கும்…..

ஆச்சே மக்களின் பிரச்சினை குறித்து கற்றுக்கொள்ள இந்தோனிசியாவுக்கும்……..

சைபிரஸ் மக்களின் பிரச்சினை குறித்து கற்றுகொள்ள கிறீஸ் நாட்டுக்கும்………

அந்த நாடாளுமன்றக்குழுக்கள் சென்று வந்தன.

இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் சென்றிருந்த நாடாளுமன்ற குழுக்களிலும் ஈ.பி.டி.பி கட்சி சார்பாக அதன் தலைவர் தேவா அவர்களும் பங்கெடுத்திருந்தார்.

புளொட் தலைவர் சித்தாத்தன் அவர்களும் அவைகளில் பங்கெடுத்திருந்தார்.

வட அயர்லாந்திற்கு சென்று திரும்பி வரும் போது
நாடாளுமன்றக்குழு இலண்டனை சென்றடைந்ததது.

வழமை போல் ஈ.பி.டி.பி தலைவர் தேவாவை வரவேற்க அவரது இலண்டன் பிராந்திய கட்சி உறுப்பினர்கள் அங்கு காத்திருந்தனர்.

தலைவரை கண்ட அவரது தோழர்கள் ஆரத்தழுவி முத்தமிட்டனர். வரவேற்று அவரை அழைத்துசென்றனர்.

தேவா எந்த நாடு சென்றாலும் அந்த நாடுகளின் உள்ளூர் தொலை பேசி இலக்கம் ஒன்றை பாவிப்பது வழக்கம்.
அதேவேளை அவரது இலங்கை தொலை பேசி இலக்கமும் எப்போதும் தொடர்பில் இருக்கும்.

அப்போது தமிழர் தகவல் நிலையம் என்ற ஒரு அமைப்பு இலண்டனில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தது. அதன் முதல்வராக இருந்தவர் வரதக்குமார்.

ஆங்கிலத்தில் இந்த அமைப்பை TIC என்றே அழைப்பார்கள். இந்த அமைப்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்பு என்றே அப்போது சகலரும் பேசிக்கொள்வார்கள்.

தேவாவை வரதகுமார் சந்திக்கும் தருணங்களில் இந்த அமைப்பை Tiger Information Center என்றும் ஆகவேதான் இது TIC என்று சொல்லப்படுகிறது என்று தனது பாணியில் தேவா சிரித்துக்கொண்டே கூறுவது வழக்கம்.

உண்மையில் TIC என்பதன் அர்த்தம் Tamil Information Center ஆகும்.

இலண்டனில் தங்கியிருந்த தேவாவின் இலண்டன் உள்ளூர் தொலை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

வரதக்குமாரின் தமிழர் தகவல் நிலையத்தின் ஏற்பாடில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்திருக்கினம்…..

சந்தித்தால் என்ன தோழர்?…அப்படியா?… ம்.. ம்.. ம்…
என்று வழமைபோல் சற்று யோசித்துவிட்டு,…..
சந்திக்கலாம் என்றார் தேவா,..

அந்த இடத்தில் தேவாவை சுற்றி அவரது இலண்டன் தோழர்களும் ஆதரவாளர்களும் இருந்தனர்.

தோழர்!… அவர்கள் புலி அமைப்பு,…… என்றனர் அங்கிருந்த சிலர்.

அதற்கென்ன?… அவர்களோடுதான் பேச வேண்டிய தேவை இருக்கு.

உடன்பட்டவர்களோடு பேசுவது மாத்திரமல்ல முரண்பட்டு நிற்பவர்களோடும் பேசுவதுதான் நல்லது என்று விளக்கம் கொடுத்தார் தேவா.

தேவாவுடன் கூடவே பிறந்த குணம் ஒன்று உண்டு.
நடைமுறை சார்ந்து சிந்திக்க வேண்டும் என்பதில்
அவர் பிடிவாதமாக இருந்தாலும்,…

சவால்களுக்குள் இறங்கி சதிராடுவதில் அவருக்கு அலாதிப்பிரியம்.

ஆகவேதான் எதிர்ப்புக்கள் வரும் என்று தெரிந்து கொண்டும் தனது தோழர்கள், மற்றும் ஆதரவாளர்களின் உடன்பாட்டோடு அந்த சந்திப்புக்கு தயாரானார் தேவா.

அந்த அரசியல் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பலரும்
பிரபாவின் ஆதரவாளர்களாகவே இருந்தனர்.
பொதுவான அரசியல் நிலைப்பாட்டை கொண்டவர்களும்
அங்கு கூடியிருந்தனர்.

தாயகத்தில் நடக்கும் அரசியல் நிலவரங்கள் குறித்து தேவா முதலில் விளக்கம் கொடுத்தார்.

அழிவு யுத்தம் எமது மக்களைகொன்று குவித்துக்கொண்டிருக்கிறது. இனியும் அந்த அவலமே தொடரப்போகிறது என்று கள நிலை யதார்த்தங்களை எடுத்துரைத்தார் தேவா,..

அப்படியென்றால் இப்போது என்ன செய்ய வேண்டும்?..
குரல் எழுப்பினார்கள் கூட்டத்தில் இருந்தவர்கள்.

யுத்தம் எமது மக்களுக்கு அழிவுகளை மட்டுமே தரும்.
இப்போதும் அழிவுகள் தொடர்வதற்கான ஒரு அவலச்சூழலே உருவாகியிருக்கிறது.

அரசாங்கம் யாழ் குடாநாட்டை மீட்க திட்டமிட்டிருக்கிறது.
அப்படி நடந்தால் யுத்தத்தின் மத்தியில் இன்னும் அங்கு அழிவுகளே மிஞ்சும்…..

யாழ் குடாநாட்டின் மீதான படை நகர்வையும் அழிவுகளையும் என்னால் தடுத்து நிறுத்த முடியும் என்றார் தேவா.

ஆனாலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் அதற்கு பச்சைகொடி காட்டவேண்டும். சில உடன்பாடுகளுக்கும் அவர் வரவேண்டும் என்றார் தேவா,..

சகோதரப்படுகொலைகளை பிரபா உடன் நிறுத்த வேண்டும்,. தமிழர் தரப்பினர் ஒரு குரலில் பேச வேண்டும்
முறிந்த சமாதான பேச்சை தொடர வேண்டும்.
அர்த்தமுள்ள அரசியல் தீர்வை பிரபா ஏற்கவேண்டும்.

இதற்கு பிரபா உடன்பட்டால் நடக்கப்போகும் அவலங்களில்
இருந்து தமிழ் மக்களை தான் பாதுகாப்பேன் என்றார் தேவா.

இதை தேவா சொன்னவுடன் பிரபாவின் ஆதரவாளர்கள்
வாதத்தை நிறுத்தி வாயை மூடிக்கொண்டனர்,..

தேவாவிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுகொண்டிருந்த
பிரபாவின் விசுவாசிகள்

பிரபாவை அணுகி தேவா சொன்ன நியாயங்கள் குறித்து
பேச முடியாதென தமது வாய் மூடி மௌனத்தால்
ஒப்புக்கொண்டு விட்டனர்.

இதைத்தான் தேவா வேறு,. பிரபா வேறு என
இத்தொடரில் சொல்லி வருகின்றேன்.

அடுத்த அனுபவத்தொடரில்
சந்திப்போம்!

அனுபவ புத்திரன்.

Related posts: