ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 3

Saturday, March 5th, 2016

ஆயுதமேந்திய தமிழ் போராட்ட இயக்கப் போராளியாக
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செயற்பட்டிருந்த காலத்தில்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சமாந்திரமான நிலையில்
செயற்பட்டவர்
போராட்ட இயக்கத்தையும் அதே வகையில் 
செயற்படுத்தியவர்!

போராட்ட வாழ்க்கையைக் கைவிட்டு
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தேசிய அரசியல் வழிக்கு வந்த பின்பு
பிரபாகரன் 
தனது கொலைப் பட்டியலில்
முதலாவதாக எழுதிக்கொண்ட பெயர்
டக்ளஸ் தேவானந்தா!

தோழர் எடுத்திருந்த மாற்று வழி
நடைமுறைக்கு சாத்தியமான
ஏற்றமிகு வழியாக இருந்ததால்
தங்கள் வழி
இறக்க வழியாகப் போவது கண்டு
பிரபாகரன் தேடி அலைந்த பிரதான இலக்கு
டக்ளஸ் தேவானந்தா!

இதனால்
பல்வேறு வழிகளில் தோழரைக் கொலை செய்ய
விடுதலைப் புலிகளின் தலைவரும்
அதன் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்
மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் 
தோல்வியாக்கப்பட்டு 
தோழரின் உயிர் உறுதிபடுத்தப்பட்டது!
தெரியவந்தே 13 தடவைகள்
கொலை வெறித் தாக்குதல்கள் தொடர்ந்தன
திரும்பத் திரும்ப 13 தடவைகள்
தப்பிப்பதென்பது இலகுவான காரியமல்ல!

இவ்வாறான சம்பவங்கள்
திட்டமிடல்கள்
இவற்றிலிருந்து தப்பித்த விதங்கள்
இவர் பெற்ற யுத்தப் பயிற்சிகள்
அதனது அனுபவங்கள்
ஈழத் தமிழர் போராட்ட வரலாறு
அதில் இவரது பாத்திரம்பங்களிப்பு
வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாத்திரம்பங்களிப்பு
ஏனை தலைவர்கள்முக்கியஸ்தர்களது பாத்திரங்கள்
பங்களிப்புகள்
சிறை அனுபவங்கள்
அரசியல் வாழ்க்கை அனுவபங்கள்
இவர் மீது சுமத்தப்படும் அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுகள்
அவற்றின் பின்னணிகள்
ஏற்கக்கூடிய காரணங்கள் என
அனைத்தையும் உள்ளடக்கி இந்தத் தொடர்
என்னால் எழுதப்படுகின்றது!
இதன்போது ஏதாவது தகவல்கள் விடுபட்டடிருப்பின்
தெரிந்தவர்கள்அறிந்தவர்கள்
தந்துதவினால் வசதியாக இருக்கும்.

ஏதேனும் விடயங்கள்சம்பவங்கள் குறித்து
கருத்துக்கள் இருப்பினும் தந்துதவவும்

நன்றி,

அன்புடன்

ஈழ நாடன்.

(தொடரும்)

Related posts: