பங்காளிக் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்? 

Friday, May 6th, 2016

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உரு வாக்கவில்லை என்று கூறியவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர்.

எனினும் அது பற்றி அவரோடு இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ஐயா! விடுதலைப் புலிகளால்தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று சொல்ல முடியாமல் போயிற்று.

அவ்வாறு சொன்னால் அடுத்த தேர்தலுக்கு சீட் தரமாட்டார் என்ற பயத்தில் மெளனம் காக்கப்பட் டது.

இது ஒருபுறம் இருக்க தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அடுத்த தேர்தலில் தமிழரசுக் கட்சியாக மட்டுமே களம் இறங்கும் என்பது சர்வ நிச்சயம்.

இதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சிக்குள் இருக்கக்கூடிய பங்காளிக் கட்சிகளை ஓரம் கட்டி விட்டு, மே தினக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

தனித்து தமிழரசுக் கட்சிக்கான ஆதரவை அள விடுகின்ற ஒரு செயல்முறையாகவும் இம் மே தினக் கூட்டத்தை சம்பந்தர் ஐயா நடத்தியிருக்கலாம்.

எது எப்படியாயினும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் ஆசீர் வதிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  உடைக்கப்பட்டால், பங்காளிக் கட்சிகளின் எதிர்கால நிலைமை என்னவாகும் என்பதே இப்போது இருக்கக் கூடிய சிக்கல்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடிய பங்காளிக் கட்சிகளை வெளியேற்றுவது மட்டுமல்ல இலங்கை தமிழரசுக் கட்சி சார்ந்த- தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவரையும் ஓரங்கட்டுவதற்கான முன்னாயத்தங்கள் நடப்பது தெரிகிறது.

ஏற்கெனவே வடக்கின் முதமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு மே தின நிகழ்வில் எந்த இடமும் வழங்கப்படாமை வட பகுதி மக்களுக்கு சம்பந்தர் மீது பலத்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டாக வலியுறுத்துகின்ற இந்த நேத்தில், வடக்கில் நடக்கின்ற மே தின நிகழ்வில் வடக்கின் முதலமைச்சரை சம்பந்தர் ஓரம் கட்டியது எதற்காக? ஏன் அவர் அப்படிச் செய்ய வேண்டும் அவரிடம் வடக்கு – கிழக்கு என்ற பேதமை இருக்கிறதா என்று வட பகுதி மக்கள் சிந்திப்பதில் தவறில்லை.

மக்களின் இத்தகைய சிந்தனைகள் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்  என்பதுடன் பங்காளிக் கட்சிகளும் துணிந்து தமது பலத்தை வெளிப்படுத்துவது அவசியம்.

இதற்காக பங்காளிக் கட்சிகளுக்கு இடையே நிறைந்த ஒற்றுமையும் புரிந்துணர்வும் இருப்பது கட்டாயமானதாகும்.

பங்காளிக் கட்சிகளின் ஒற்றுமையும் புரிதலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறு திப்படுத்தும். கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடிய பங்காளிக் கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் கூட்ட மைப்பின் மே தின நிகழ்வு வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் என்ற தீர்மானத்தை எடுத்திருக்கமுடியும்.

இது தமிழ் மக்களிடம் எழுச்சியையும் ஒற்றுமையையும் பலப்படுத்தியிருக்கும் என்பதால் பங்காளிக் கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமையை பலப்படுத்தி தமிழ் மக்களின் உமைகளை வென்றெடுக்க கடுமையாக பாடுபடவேண்டும்.

(நன்றி வலம்புரி)

Related posts: