ஈழப் போராட்டத்தில்  மறைக்கப்பட்ட உண்மைகள்…! – மதிவண்ணன்.  பாகம் 1

Monday, March 14th, 2016

யக்கங்களை ஸ்தாபித்தவர்களில் ஒருவர். தமிழ் மக்களின் விடுதலைக்கானதும், அரசியல் உரிமைகளுக்கானதுமான நெடிய போராட்டத்தில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு பார்வையாளனாக இருக்கவில்லை.

பங்காளியாகவே இருந்துவருகின்றார். தொடர்ந்தும் எமது மக்களுடனேயே வாழ்ந்து வருகின்றார்.

தமிழ் ஆயுத இயக்கங்களை ஸ்தாபித்து தலைமையேற்று நடத்தியவர்களில் இன்னும் ஒருவர் உயிருடன் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைக்கான அரசியல் ஜனநாயகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார் என்றால் அது டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டும்தான்.

தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும், தமிழ் ஆயுத இயக்கங்களின் முன்னாள் போராளிகள் அனைவருக்கும், ஒரு போராட்ட தலைமையாக இருக்கின்றார்.

இயக்க மற்றும், போராட்ட வழிமுறை பேதங்களுக்கு அப்பால் போராட்ட உணர்வுத் தூண்டலையும், அதன் வலிகளையும், தியாகங்களையும் புரிந்து கொள்ளக்கூடியவராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்பதால்தான் அனைத்து இயக்க முன்னாள் உறுப்பினர்களும் இன்றும் அவரை நெஞ்சார்ந்த மரியாதையோடு மதிக்கின்றனர்.

போராட்டத்தில் உண்மையாக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கும், தம்மையே தியாகம் செய்யத் துணிந்தவர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வரலாறு மிக உணர்ச்சிமிகுந்ததாகவும், நெருக்கமானதாகவும் இருக்கும்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் தமிழ் சாத்வீக அரசியல் தலைமைகளினால் வீரியமாக முன்னெடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் தமிழ் இளைஞர்களிடையே வெடித்து வெளிக்கிளம்பிய போது, ஆயுதம் ஏந்தி தலைமை தாங்கிப் போராடுவதற்கு முன் வந்தவர்களில் டக்ளஸ் வோனந்தா அவர்களும் ஒருவராக இருந்தார்.

தமிழ் மாணவர் பேரவை, ஈழ விடுதலை இயக்கம் ஆகியவற்றில் இருந்திருந்தாலும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஈரோஸ் அதன் மாணவர் அமைப்பு, ஈழமாணவர் பொது மன்றம் (GUES), ஆகியவற்றை தாயகத்தில் ஸ்தாபித்து, செயற்பாட்டு உறுப்பினராகவும் ஆரம்ப காலங்களில் இருந்திருந்தவர்.

தோழர் பத்மநாபா அவர்களுடனும், தோழர் குண்சி அவர்களுடனும் சேர்ந்து .பி.ஆர்.எல்.எப் இயக்கத்தை தொடங்கியவர் அதன் மத்திய குழு அரசியல் பீட உறுப்பினராகவும், இயக்கத்தின் இராணுவத் தளபதியாகவும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தன்னை முழுமையாக அர்ப்பணித்து செய்த பங்களிப்புக்களை அவரது போராட்ட வரலாற்றில் முக்கியமானதாக கருதுகின்றேன்.

தோழர் பத்மநாபா அவர்களைப்போல் சிறந்த தலைவரோடு செயற்பட்ட அந்தக் காலங்கள் இனி ஒரு முறை எனக்கு திருப்பிக் கிடைக்காதா என ஏங்குகின்றேன் என்றும் அதுபோலவே அக்கால கட்டத்தில் தன்னோடு சேர்ந்து தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட தோழர்களையும் கௌரவத்தோடும், பாசத்தோடும் நினைவில் வைத்திருக்கின்றேன் என்று டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி கூறுவார்.

அந்த ஏக்கங்களைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்.
.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், தோழர் பத்மநாபா அவர்கள் உத்தியோகபூர்வத் தலைவராக இருந்தாலும் அவ்வியக்கத்தினை 1986 மே மாதம் வரையில் தளத்தில் நின்று தலைமை தாங்கி வழி நடத்தியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்தான்.

அன்று இயக்கங்களுக்குள்ளும், இயக்கங்களுக்கு இடையேயும் முரண்பாடுகள் தலை தூக்கிய போது, அதைக் கொலைகளின் ஊடாகவே தீர்க்க இயக்கங்கள் முற்பட்டிருந்தன.

ஆனால் டக்ளஸ் தேவானந்தா அவர்களோ, அதிலிருந்து வேறுபட்டவராக, விமர்சனம், சுய விமர்சனத்திற்கு ஊடாகவும், பெரும்பான்மைக்கு, சிறுபான்மை கட்டுப்படுவது என்ற ஜனநாயக மத்திஸ்த்துவ கோட்பாடுகளை பின்பற்றி இயக்கத்திற்குள் பிரச்சனைகளை தீர்க்க முற்பட்டவர்.

அதேபோல் சக இயக்கங்களுக்கிடையே பிரச்சனைகள் எழுந்த போது அவற்றை சகோதரத்துவத்துடனும் தோழமையுடனும் பேச்சுவார்த்தைகளுக்கூடாக சமரசம் செய்து பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள உதவி செய்திருக்கின்றார்.

ஒருபோதும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கொலைகளை தீர்வுக்கான ஆயுதமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவருடன் இருந்த தோழர்களுக்கு நன்கு தெரியும். பேச்சுவார்த்தைகள் மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணமுடியுமென்ற நம்பிக்கையை வலியுறுத்தி வந்திருக்கின்றார்.

இன்றும் அவரது நிலைப்பாடு அதுதான்.

மறைக்கப்பட்ட உண்மைகள் தொடரும்…………!

Related posts: