கிளாலி கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்ட திட்டங்களை தொடர்பில் கள ஆய்வு!

Thursday, March 21st, 2024

பூநகரி பள்ளிக்குடா சங்கத்தின் கீழ் வரும் இறங்குதுறைகள் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் கபில குணவர்தன தலைமையிலான அதிகாரிகள் குழுவினால் நேற்றையதினம் (20) பார்வையிடப் பட்டன.

அமைச்சர் அவர்களின் விசேட ஏற்பாடாக  நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 250 மில்லியன். ரூபா ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளின் நிலைமைகளும் இன்றையதினம் பார்வையிடப்பட்டன.

இதில் கடலரிப்புக்குள்ளான இறங்குதுறை புனரமைப்பின் அவசியம் பள்ளிக்குடா சங்க பிரதிநிதிகளால் சுட்டிக் காட்டப்பட்டது.

இதனிடையே கடற்றொழில் அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள் கிளாலி கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்ட திட்டங்களை இன்றையதினம் பார்வையிட்டனர்.

படகுகளின் பாதுகாப்பான பயணத்துக்கான  வெளிச்ச வீடு மற்றும் படகுகளை கரையொதுக்குவதற் கான வழித்தடத்தை ஆழமாக்குவதற்கான திட்டங்களும் இந்த விஜயத்தின் போது பரிசீலனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: