கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தின் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, March 29th, 2021

கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவரும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு உப உணவுப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்துக்கான பயிர்ச்செய்கை நீர்வழங்கல் கூட்டம் மார்ச் 24 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனன் தலைமையில் நடைபெற்றபோது, அமைச்சர் டக்ளஸின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகியைல் –

உழுந்து, பயறு உள்ளிட்ட சிறுதானியங்கள், வெங்காயச் செய்கை, மரக்கறிச் செய்கை என பல்வேறு விவசாய நடவடிக்கைகளின் ஈடுபட்டுவரும் கண்ணகைபுரம் கிராம மக்கள், தமது விவசாய உற்பத்திகளுக்கான போதிய சந்தைவாய்ப்பைப் பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு கொரோணா நெருக்கடி உச்சமாக இருந்த காலப்பகுதியில் இந்தக் கிராமத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பலநூறு கிலோகிராம் பூசணிக்காய் உரிய சந்தைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் அழுகி நாசமடைந்தது. இதனால், பூசணி செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பெருத்த நட்டத்தை எதிர்கொண்டனர்.

இதுகுறித்து கவனம் செலுத்திய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன், இனிவரும் காலத்தில் கண்ணகைபுரம் கிராமத்தில் விவசாய உற்பத்திகளுக்கு உரிய சந்தைவாய்ப்பைப் பெற்றுத்தர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், விவசாய உற்பத்திகளை வெறுமனே நேரடியாகச் சந்தைப்படுத்தாமல், பெறுமதிசேர் உற்பத்திகளாக அவற்றை மாற்றுவதன் மூலம் அதிகளவு வருமானத்தை விவசாயிகள் பெற்றுக்கொள்ளும் வகையில் சிறுகைத்தொழில் முயற்சிகளுக்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் ஊடாக செய்து தருவதாகவும் இதன்போது மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: