தேசிய பாதுகாப்பு குறித்து சபையில் நாளை விவாதம்!
Thursday, June 6th, 2019
நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் தேசிய பாதுகாப்பு
தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்படி விவகாரம் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொண்டு வரவுள்ளது.
பிற்பகல் ஒரு மணி முதல் இரவு 7.30 மணிவரை விவாதம் நடைபெறும் என அறிய முடிகின்றது.
அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது அடுத்த மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
முன்னாள் பிரதமர் வெளிநாடு செல்லத் தடை!
நாட்டில் மின்சார நெருக்கடி தொடர்வதன் பின்னணியில் சதித்திட்டம் – அமைச்சர் நாமல் சந்தேகம்!
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை - மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசார...
|
|
|


