அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவுக்கு அமைய வேலணை பிரதேச நன்னீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன!

Friday, February 7th, 2020

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில் ஒருதொகுதி மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த திட்டம் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம்(07) வேலணை பிரதேசத்தின் நன்நீர் நிலைகளான நவக்கைக் குளம், செட்டிப்புலம், சிலுந்தாக்குளம், கௌவிப்புகக்குளம் ஆகிய குளங்களில் குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

குறித்த திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலும்மயிலும் குகேந்திரன் கலந்து கொண்டு முன்னெடுத்திருந்தார். அத்துடன் குறித்த மீன்குஞ்சுகள் வரும் மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வில் மாவட்ட நீர்வாழ் உயிரின வள விரிவாக்கல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேசத்தின் தவிசாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி மற்றும் கட்சியின் வேலணை பிதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் கமநல உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts: