யாழ் மாநகரின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் ஆரம்பம்!

Friday, December 7th, 2018

யாழ் மாநகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாதீடு தொடர்பான விவாதம் தற்போது யாழ் மாநகரசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

சபையின் முதல்வர் ஆர்னோல் தலைமையில் நடைபெறும் குறித்த பாதீடு தொடர்பான விஷேட கூட்டத்தொடரில் ஆளும் கட்சியான தமிழ் தேசியக கூட்டமைப்பு (16), ஐக்கியதேசிய கூட்டமைப்பு (3) ஆகியனவும் பிரதான எதிர்க்கட்சி வரிசையில்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(10) ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி (2) தமிழர் விடுதலைக் கூட்டணி (1)  மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (13) ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றன.

யாழ்.மாநகரின் புதிய பாதீட்டில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் மக்கள் நலன் கருதிய செயற்பாடுகள் இன்றிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் இந்த பாதீடு பல்வேறு சர்ச்சகைளுக்கு மத்தியில் இன்றையதினம்(7) விவாதத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அக்கட்சியுடன் ஐக்கிய தேசியமுன்னணி உறுப்பினர்களுமாக மொத்தம் 19 உறுப்பினர்கள் உள்ளநிலையில் பிரதான இரு எதிர்க்கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சி வரிசையில் 26 உறுப்பினர்கள் உள்ள நிலையில் இன்றைய அமர்வு பெரும் சர்ச்சைகள் நிறைந்ததாக காணப்படும் என பரவலாக எதிர்பார்க்கபபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: