இலங்கையின் கல்வித்துறைக்கு உலக வங்கி 100 மில்லியன் டொலர் கடனுதவி!

Sunday, April 29th, 2018

நாட்டின் கல்வியினை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கு உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது.

இதற்கான அங்கீகாரம் உலக வங்கியின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் போது கிடைத்துள்ளது.

தற்போது நாட்டின் கல்வி உயர்நிலையில் காணப்படுகின்ற போதிலும் இலங்கையை நடுத்தர உயர்வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதாயின் கல்வித்துறை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்காக  இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் கல்வித்துறையை நவீன மயப்படுத்தவும், ஆரம்பக் கல்வி தொடக்கம் தொழிற்கல்வி வரையான மாணவர்களுக்கு சலுகைகளை வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

Related posts:


வடபகுதி கடற்றொழில் துறையை மேம்படுத்துவதே எமது நோக்கம் -  கடற்றொழில் நீரியல் வழத்துறை அமைச்சின் செயலா...
மக்கள் நிலையான நகர வசதிகளை அனுபவிக்க முறையான நகரங்களை உரித்தாக்குவதே எனது எதிர்பார்ப்பு – உலக நகர தி...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 419 பேருக்கு டெங்கு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ...