முன்மொழிவுகள் ஒவ்வொன்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும் – கட்சியின்  வலிகாமம் பிரதேச நிர்வாகிகள் மத்தியில் தோழர் ஜீவன் சுட்டிக்காட்டு!

Saturday, August 18th, 2018

மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான சரியான திட்டங்களை முன்மொழிவதன் ஊடாகவே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். அதற்காக எமது கட்சியால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை பாரபட்சமற்ற வகையில் செயற்படுத்த நாம் ஒற்றுமையுடன் உழைக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டுமானம் தொடர்பான செயற்றிட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக வலிகாமம் பிரதேசத்தை உள்ளடக்கிய கட்சியின் பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவிச் நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பொன்று கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் பிரதேச நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையில்  நடைபெற்றுள்ளது.

இதன்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் தெரிவித்தாவது –

யுத்தம் நிறைவுற்றும் மக்கள் இயல்பு வாழ்வுக்கு இன்றுவரை பூரணமாக திரும்பாதவர்களாக பல்வேறு சுமைகளை தாங்கியவாறு வாழ்ந்துவருகின்றனர்.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது நாம் பல்வெறுவகையான செயற்றிட்டங்களை முன்னெடுத்து எமது மக்களின் வாழ்வாதார நிலைமைகளை ஓரளவு முன்னேற்றம் காணச் செய்திருந்தோம்.

ஆனால் தற்போது அரசியல் மாற்றத்தால் அவ்வாறான முன்னெடுப்புக்களை எம்மால் முழுமையாக மேற்கொள்ளமுடியாதுள்ளது. இதனால் மக்களது நிலைமை சாண் ஏற முழம் சறுக்கும் நிலையாகவே இருக்கின்றது.

ஆனாலும் மத்திய அரசுடன் எமது கட்சியின் செயலாளர் நாயகம் கொண்டள்ள நெருக்கமான உறவுநிலை காரணமாக அவர் விஷேட திட்டங்களை பெற்று எமது மக்களின் தேவகளை நிறைவுசெய்வதற்கான மயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்.

அந்தவகையில் அத்திட்டங்களுக்கான தெரிவகளாக மக்களின் நிலைமைகளை நன்கு உணர்ந்தவர்களாக அவர்களின் அடிப்படை தேவைகளை ஆழமாக கருத்தில் கொண்டு முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது வலிகாமம் மேற்கு வலிகாமம் கிழக்கு வலிகாமம் தெற்கு வலிகாமம் தென்மேற்கு வலிகாமம் வடக்க உள்ளிட்ட பிரதேசங்களின் நிர்வாக செயலாளர்கள் மற்றும் உதவி நிர்வாக செயலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

39408839_1351515961647820_8191385567078907904_n 39393999_260289314598397_6005170616968151040_n

Related posts:


பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து எவ்வித அனுமதியும் கிடைக்கவில்லை - இந்திய விமான நிலையங்களின் அ...
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை - பிரதமரினால் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
13ஆவது திருத்தச் சட்டத்தில் துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக...