வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் விவசாய காணிகள் பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021

வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டு இதுவரை விடுவிக்கப்படாத விவசாய நிலங்கள் தொடர்பில் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான குலசிங்கம் திலீபன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

குறித் பிழரச்சினை தொடர்பாக வவுனியா சுந்தரபுரம் கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறு சுந்தரபுரம் கிராம சேவையாளர்  மற்றும் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன்போது மக்கள் பயன்படுத்தக்கூடிய பல இடங்கள் வன இலாகாவால் தடுக்கப்பட்டிருப்பதை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் அது தொடர்பில் தீர்வினை குறித்த அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக துறைசார் அமைச்சுக்கு தெரியப்படுத்தி விரைவில் விடுவித்து தருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு தருவதாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம் குறித்த பிரதேச மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் மற்றும் வீதி சீரின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளை நேரில் பார்வையிட்டதுடன் அவற்றுக்கும் விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாகவம் குறிப்பாக வீதிகள் கார்பெட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட நடவடிக்கை மேற்கொண்டு தருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: