இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த தீர்மானம்!
Wednesday, March 1st, 2023
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வர்த்தக நகரமான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக கொண்டு இலங்கை போக்குவரத்து சபையினால் மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதன்படி, முறையான சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் ஒரு பரீட்சார்த்த திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக்கட்டுப்பாடு நீடிப்பு - இராணுவ தளபதி அறி...
அமரர் தோழர் செல்வம் அவர்களின் ஊறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆறுதல்!
அதானி நிறுவனத்தின் முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமானவை - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த ...
|
|
|


