சீனாவின் எலிட் நிறுவனத்திடமிருந்து அறிக்கை..!

Saturday, September 21st, 2019

தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக, முதலில் தொடர்புபட்டிருந்த எலிட் நிறுவனம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தாமல் அந்தத் திட்டத்திலிருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கான இலங்கை தூதுவரான பேராசியர் கருணாசேன கொடித்துவக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனம் சீனாவில் தற்போது, பிறிதொரு இடத்தில் உள்ளதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சீனாவின் எலிட் நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக எலிட் நிறுவனம் CEIEC நிறுவனத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு இணக்கப்பாட்டு உடன்படிக்கையை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, CEIEC நிறுவனத்துடன் மாத்திரம் தாங்கள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாக எலிட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தாமரைக் கோபுர திட்டத்திற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஒரு கோடியே 56 இலட்சத்து 44 ஆயிரத்து 980 டொலரை, CEIEC நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக எலிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிதி வேலைத்திட்டப் பணிகளுக்காக மாத்திரமே முழுமையாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள எலிட் நிறுவனம், தங்களது நிறுவனம் சர்வதேச ரீதியில் நன்மதிப்பை பெற்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts:


சந்தர்ப்பவாத தலைமைகளை விரட்டியடிக்க ஒற்றுமையுடன் முன்வாருங்கள் - தோழர் மாட்டின் ஜெயா தெரிவிப்பு!
மக்கள் ஆணையை தேர்தல் ஆணைக்குழு வெற்றிபெறச் செய்யவேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
ஊர்காவற்துறை மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைகளின் கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – வ...