பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க மறுத்தனரா தாதியர்கள்? – வவுனியா வைத்தியாசாலையில் நடந்ததாக வெளியானது தகவல்!

Tuesday, August 15th, 2023

வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க முடியாது என தாதியர்கள் தெரிவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ள நிலையில் குறித்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலைக்கு மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவருக்கு  பிறந்து 10 நாட்களாகன சிசுவுக்கும், தாதியர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சிகிச்சையளிக்க மறுத்துள்ளனர்.

வைத்தியசாலையின் 7 ஆம் விடுதி குழந்தைகள் பிரிவில் உள்ள தாதியர்கள், தலைமை தாதியர் மற்றும் பயிற்சியில் உள்ள வைத்தியர் குறித்த பெண்ணின் கணவருக்கு உங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

உங்களால் சிகிச்சை அளிக்க முடியாது எனில் லாமா(Lama) முறை அடிப்படையில் அந்தப்பெண்ணின் கணவர் தம்மை விடுவிக்குமாறு கோரி விடுகைப்பத்திரத்தில் 12.08.2023 அன்று இரவு 10 மணியளவில் கையெழுத்து இட்ட பிற்பாடும் அடுத்த நாள் மாலை 3 மணிவரை சிகிச்சையும் அளிக்காமல் தாய் சேய் இருவரையும் விடுதியிலேயே வைத்துள்ளனர்.

இதனை வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரது கவனத்திற்கு கொண்டு சென்றும் அலட்சியப்போக்குடன் செயற்பட்டதுடன் தாதியர்கள் 13.08.2023 அன்று மதிய நேர தாய்க்குரிய மருந்து வில்லைகளையும் வழங்க மறுத்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை கிடைத்ததால் வில்லைகளை வழங்காது விட்டதால் வலியால் பெரும் அவஸ்தை உற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த நிலையில் கடும் விமர்சனம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: