அனைத்து சுற்றறிக்கைகளும் இரத்து – ஓகஸ்ட் 2 முதல் அரச சேவை முழுமையாக வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு!

Friday, July 30th, 2021

கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி ஓகஸ்ட் 2 ஆம் திகதி  திங்கட்கிழமைமுதல் அனைத்து அரச ஊழியர்களும் வழக்கம் போல பணிக்கு அழைக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி போடப்பட வேண்டிய மக்கள் தொகையில் பெரும் சதவீதம் தற்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் போடப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதால், பொது சேவையை வழக்கம் போல பராமரிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எனவே, கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி ஓகஸ்ட் 2 ஆம் திகதிமுதல் அனைத்து அரச ஊழியர்களும் வழக்கம் போல பணிக்கு அழைக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் .ரத்னசிறிக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அசர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு வசதியாக ஒரு வரையறுக்கப்பட்ட பணியாளர் சுழற்சி அடிப்படையில் அழைப்பு மற்றும் மேலும் வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பாக வெளியிடப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளையும் இரத்து செய்யப்படுவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: