பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும் – இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022

சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 31 ஆம் திகதிமுதல் பால்மா விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்தனர்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டன.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால்மா பொதி அயிரத்து 345 ரூபாவிற்கும் 400 கிராம் பால்மா பொதி 540 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: