சேதமடைந்த நாணயத்தாள்களை  மாற்றிக் கொள்வதற்கு மார்ச் 31வரை கால அவகாசம் !

Wednesday, February 7th, 2018

சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக இலங்கை மத்திய வங்கியின் நிதித் திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா அசனவிரத்தின தெரிவித்தார்

நாணயத்தாள்களுக்கு எந்தவித பாதிப்பும் எற்படாத வகையில் அதனைப் பயன்படுத்துவது நாட்டின் நற்பெயருக்கு மிகவும்  முக்கியமானது என அவர் குறிப்பிட்டாh.;  இது தொடர்பில் இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :-ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாணையத்தாள்கள் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது வெளிநாட்வர்கள் இலங்கைக்கு வருகை தந்து தமது நாட்டு நாணையத் தாள்களை பெற்றுக் கொள்ளும் போது அதன் சுத்தத் தன்மை தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படுகின்றது

நாணையத் தாள்களை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் அறிவு மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது நாணையத் தாள்கள் இவ்வாறு பாதிப்புக்குள்ளாவதினால் குறித்த காலப்பகுதிக்கு முன்னதாக  நாணையத் தாள்களை மத்திய வங்கி அச்சிட வேண்டியுள்ளது நாணையக்குற்றிகளை பயன்படுத்துவதன் தேவை குறித்து சுட்டிக் காட்டியுள்ள அவர் விகாரைகள் , ஆலயங்கள் ,வீடுகளில் உண்டியல்களில் சேகரிக்கப்படும் நாணையக்குற்றிகளை மத்திய வங்கியினால் மீண்டும் தயாரிக்க வேண்டியுள்ளது நாணையக்குறியில் காணப்படும் பெறுமதியிலும் பார்க்க கூடுதலான தொகையை அவற்றை தயாரிக்க செலவிட வேண்டியுள்ளது இருப்பினும் நாணையக்குற்றிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை போதுமான நாணையக்குற்றிகள் வர்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்

Related posts:


தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு: தீவிர பாதுகாப்பில் நாடாளுமன்றம் - வெற்றிபெறுவாரா பிரதமர் ரணில்!
கொள்ளையர்களிடமிருந்து பொருட்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்’டும் - ...
அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்வோருக்கே புகையிரத சேவை முன்னெடுப்பு - புகையிரத திணைக்கள பொதுமுகாமையாள...