அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்வோருக்கே புகையிரத சேவை முன்னெடுப்பு – புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021

கொரோனா சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பிக்கவுள்ள நிலையில் 110 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி காலை மற்றும் மாலை அலுவலக சேவைக்காக 110 புகையிரத பயணங்கள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்குவரத்து சேவை தொடர்பில் குறிப்பிட்ட அவர் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும். அத்தியாவசிய சேவையினை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கிடையில் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்..

இதற்கமைய இன்று காலை 4.30 மற்றும் காலை 5 மணிக்கு கண்டி- கொழும்பு கோட்டைக்கு இரண்டு புகையிரங்களும், காலை 4.30 மணிக்கு பெலியத்தை – மருதானை, காலை 5 மணிக்கு காலி – மருதானை வரை ஒரு புகையிரதம் சேவையில் ஈடுப்படும்.

அத்துடன் சிலாபம் ,மஹவ ஆகிய பகுதிகளிலும் இருந்து காலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் எவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொதுபயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்துவது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அரச ஊழியர்கள் எவ்வித இடையூறும் இன்றி வேலைக்கு செல்வதற்காக, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மாகாணங்களுக்கு இடையில் புகையிர மற்றும் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும் வேலைக்கு செல்வதற்காக மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: