ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் – திருக்கோணேஸ்வரத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024

திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் விஜயமாக திருகோணமலைக்கு விஜயம் செய்து தங்கியுள்ள அமைச்சர டக்ளஸ் தேவானந்தா வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலையத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

முன்பதாக நேற்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் கோயிலின் அபிவிருத்தி மற்றும் உள்ளக பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துக்கூறி கலந்துரையாடியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களின் அழைப்பை ஏற்று இன்றையதினம் காலையில் நடைபெறும் பூஜை வழிபாட்டில் கலந்து கொள்ளச் சென்ற அமைச்சரை பரிபாலன சபையினர் வரவேற்றதுடன் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: