புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்!
 Friday, August 19th, 2016
        
                    Friday, August 19th, 2016
            
நாளைமறுதினம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பரீட்சையின் பொருட்டு மாணவர்கள் நேரத்துடனே பரீட்சை மண்டபங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தமது பரீட்சை சுட்டெண்ணை தமது சீருடையின் வலது பக்கத்தில் அணிந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் உரிய நேரத்தில் பெற்றோர் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்து வருவதுடன், பரீட்சை மத்திய நிலையங்களுக்குள் உள்நுழைவதற்கு பெற்றோருக்கு அனுமதியளிக்கப்படாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை கைதுசெய்யும் படி பரீட்சைகள் திணைக்களம் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இம்முறை 2959 பரீட்சை மத்திய நிலையங்கள் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ளதோடு,3,50,701 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு,அதில் 421 மாணவர்கள் விசேட தேவையுடையவர்கள் என்றும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        