மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!
Thursday, June 6th, 2024
………..
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி ஆதரவாக 109 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 44 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
உத்தேச புதிய மின்சாரச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தின் எரிசக்தி மேற்பார்வைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வரட்சியால் வடக்குகிழக்குபகுதிகள் அதிகளவில் பாதிப்பு - அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளத...
அருட்கலாநிதி ஜோசப் குணாளன் தியாகராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாத...
நிலவும் சீரற்ற காலநிலை - வடக்கு மாகாணத்தில் இதுவரை 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்பு – அரச அதிபர்கள் அனர...
|
|
|


