அருட்கலாநிதி ஜோசப் குணாளன் தியாகராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Wednesday, April 11th, 2018

காலஞ்சென்ற அமரர் வணபிதா ஜொசப் குணாளன் தியாகராஜா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.

கொழும்பு தெகிவளை ரேமன்ஸ் மலர்ச்சாலையில் மக்களின் அஞ்சலி மரியாதைக்காக அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில்  இன்றையதினம் (11) குறித்த மலர்ச்சாலைக்குச் சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வேலணையை பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்தந்தை குணாளன் தியாகராஜா பேரருட்திரு டானியல் தியாகராஜா அவர்களின் சகோதரர் என்பதுடன் யாழ் மத்திய கல்லூரியின்யின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையில் சமூக பரவலாகியுள்ளது கொரோனா - PCR பரிசோதனையில் பலனில்லை என இலங்கை ஆய்வக சங்கம் எச்சரிக்கை!
ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன வி...
உயர்தர பரீட்சை - பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் - பரீ...