உயர்தர பரீட்சை – பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, December 14th, 2023

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவர்களுக்கான பரீட்சை கால அட்டவணையும் அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் இருப்பின் அவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின்  www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இருந்து அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00[

Related posts:

நவம்பரில் மட்டும் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் அடையாளம் - தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் த...
சுயாதீன ஆணைக்குழு என்பதால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது - இராஜாங்க அமைச்...
ஆங்கில மொழிப் பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தின் மூலமே தீர்வு - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவிப்ப...