இலங்கையில் சமூக பரவலாகியுள்ளது கொரோனா – PCR பரிசோதனையில் பலனில்லை என இலங்கை ஆய்வக சங்கம் எச்சரிக்கை!

Tuesday, October 20th, 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணுவதற்காக மேற்கொள்ளப்படும் PCR பரிசோரனை முற்றிலும் போலியானதென இலங்கை ஆய்வக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் PCR பரிசோதனை மாபியா ஒன்று உள்ளதாகவும் அதற்கு சுகாதார அமைச்சும் தொடர்பு எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் தனியார் பிரிவு மற்றும் பல்கலைக்கழகங்களினால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் சரியானதென ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் இந்த பரிசோதனை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையில் மேற்கொள்ளப்படுகிறதே தவிர கொள்கைக்கமைய மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதாகவும் எந்தளவு கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளார் என தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தற்போது சமூகத்திற்குள் பரவியுள்ளது. அரசாங்கத்தினால் கூறுவது போலியான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: