வரட்சியால் வடக்குகிழக்குபகுதிகள் அதிகளவில் பாதிப்பு – அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

Monday, May 29th, 2017

நாட்டின் பலபாகங்களிலும் மழை,வெள்ளம்,மண்சரிவுபோன்றஅனர்த்தங்களினால் மக்கள் பேரவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், வரட்சியினாலும் மக்கள் பாதிப்புக்களைஎதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து வமத்தியநிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்பிரகாரம் வடமாகாணம் உட்படநாடுதழுவியரீதியில் வரட்சிகாரணமாக 14 மாவட்டங்களில் 5 இலட்சத்து 2 ஆயிரத்து 574 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலட்சத்து 50 ஆயிரத்து 575 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாகவடக்குமாகாணத்தில் 5 மாவட்டங்களும்,கிழக்குமாகாணத்தில் 3 மாவட்டங்களும் வரட்சியால் மோசமானபாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

வரட்சியால் பாதிக்கப்பட்டமக்களுக்குதேவையானகுடிநீர் மற்றும் உலருயவுப் பொருட்களைவழங்குவதற்கானஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தஉதவித் திட்டங்கள் யாவும் அந்தந்தமாவட்டச் செயலாளர்களின் ஒழுங்குபடுத்தலில் பிரதேசசெயலகங்களினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: