சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரை கடனை இலங்கை எதிர்பார்க்கிறது – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Thursday, December 15th, 2022
2023 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலரை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளள அவர் மேலும் கூறுகையில் –
சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரை கடனை இலங்கை எதிர்பார்க்கிறது. அத்துடன் அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அரச நிறுவனங்கள் சிலவற்றை, மறுசீரமைப்பதில் ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார். அதன் மூலம் 2 முதல் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடிந்தால், திறைசேரியின் இருப்புக்கள் பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் சப்ரி சப்ரி தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக வரிசையில் மூன்றாம் இடத்திற்கு வந்த இலங்கை!
2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இலாபத்தை பதிவு செய்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
“ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்” - வெளியானது ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான ஆவணப்படம்!
|
|
|


