பதிவு செய்யப்படாது இயங்கும் இரசாயன மருந்துக் கடைகளுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்டச் செயலர் பணிப்பு!

Tuesday, June 20th, 2017

யாழ். மாவட்டத்தில் பயிர்ச்செய்கைக்கான இரசாயன மருந்துகளை விற்பனை செய்யும்  மாவட்டச் செயலக விவசாய திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத மருந்துக்கடைகள் மீது உடனடியாக  நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலர் வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்துவதற்கென இரசாயன மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துக் கடைகளில் 21 கடைகள் மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டச் செயலக விவசாய பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகுதிக் கடைகளை நடத்துபவர்கள் எவரும் தத்தமது கடைகளைப் பதிவு செய்யப்படாது பல கடைகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் பதிவை மேற்கொள்ளாமல் வர்த்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டும்  இதுவரை பதியாதவர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

எனவே அனைத்துக் கடை உரிமையாளர்களும் காலதாமதமின்றி பதிவுகளை மேற்கொள்ளவும். பதிவுகளை மேற்கொள்ளாத கடைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இத்தகைய கடைகளை நடத்துபவர்கள் இரசாயன பாவனைப் பயிற்சியில் என்.வி.கியூ தரம் உடைய சான்றிதழையோ அல்லது இரசாயன பாவனை தொடர்ப்பான பயிற்சிப் பட்டறையில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும். விவசாய போதனாசிரியரின் அனுமதிக் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் இரசாயன மருந்துகள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து வர்த்தகர்களும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் உஎள்ள மாவட்ட விவசாய பணிமனையில் விண்ணப்பங்களைப் பெறமுடியும். விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை முழுமைப்படுத்தி ஒப்படைக்கும் போது கட்டணமாக 550 ரூபா பணத்தையும் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய கட்டணத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையில் செலுத்த முடியும் என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக விவசாயப் பிரிவு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நாடாளுமன்றை அச்சுறுத்தும் கோரோனா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை!
உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுகின்றது - தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் சுட...
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது - ...