நாடாளுமன்றை அச்சுறுத்தும் கோரோனா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை!

Friday, January 15th, 2021

கொரோனா வைரஸ் தொற்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதை அடுத்து, அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் இன்றையதினமும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனிடையே தொற்று நீக்கும் நடவடிக்கை நிமித்தம் நாடாளுமன்றில் ஆளுங்கட்சியின் பிரதான அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த புதனன்று பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்குப் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 31 உறுப்பினர்கள், தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: