நாளை பிரதமர் சீனா விஜயம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை சனிக்கிழமை சீனாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார உறவுகள் முழுமையடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என சீனா தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் முழுமையடையும். துறைமுக நகர்த் திட்டத்தின் ஊடாக 80,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்.
சுற்றுலாப் பயணிகள், நிதி நிறுவனங்கள், அனைத்துலக நிறுவனங்களை நாட்டுக்குள் உள்ளீர்ப்பதற்கு இந்த துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் வழியமைக்கும் என சீனா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக நகராக இந்த துறைமுக அபிவிருத்தி நகர் உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இன்னும் 6 மாதங்களுக்கு டெங்கின் தாக்கம் நீடிக்கும்!
உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதியில் மாற்றமில்லை!
200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - கணக்காய்வு அலுவலகம் எச்சரிக்கை...
|
|