நாட்டில் இதுவரை 75 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு!

Wednesday, July 21st, 2021

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட 58 இலட்சத்துக்கும் அதிகமானோருக்குகோவிட் தடுப்பூசிகளின் முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இதுவரை 30 வயதுக்கு மேற்பட்ட 58 இலட்சத்து 76 ஆயிரத்து 282 பேர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

அதேநேரத்தில் 16 இலட்சத்து 97 ஆயிரத்து 689 பேருக்கு  இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது என தகவல்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 14.8 சதவீதம் பேர் கடந்த திங்கள்கிழமைவரை இரண்டு அளவுகளுடன் முழுமையாக தடுப்பூசி அளவுகளை பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 51.1 சதவீதம் பேர் இதுவரை முதல் அளவைப் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டர்வர்களின் எண்ணிக்கை 75 இலட்சத்து 73 ஆயிரத்து 967 பேர் தடுப்பூகியை பெற்றுள்ளனர்.

அதேநேரம் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தமது முதல் அளவைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 77 சதவீத மக்கள் முதல் அளவைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts: