அனைத்து எரிபொருள் தாங்கி ஊர்திகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்புகள் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, April 6th, 2023

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் தாங்கிகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படுமென அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று காலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான ட்விட்டர் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தாங்கி ஊர்திகளுக்கு GPS அமைப்பு பொருத்தப்படும். அதன்பின்னர் அனைத்து தனியார் தாங்கிகளுக்கு அவை பொருத்தப்படும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து எரிபொருள் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% சேமிப்பு கொள்ளளவை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: