கொரோனா அச்சுறுத்தலுடன் இலங்கையை மேலும் இரண்டு கொடிய நோய்கள் தாக்கும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, April 29th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மேலதிகமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் நோய்களும் பரவுவதற்கான ஆபத்தும் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களிடம் கேட்டுள்ளது.

அத்துடன் குறித்த நோயின் பரவலை குறைப்பதற்காக துறைசார் துறையினர் வேலைத்திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன கோரியுள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா, டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் ஆகிய 3 நோய் தொற்றினதும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளது.

எனினும் அவை இலங்கை வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாத மட்டத்தை நோக்கி செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: