நாகபடுவான் குள அணைக்கட்டின் நிலமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவாவின் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் நேரில் சென்று ஆராய்வு!

Monday, July 3rd, 2023

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்தள்ள நீர்ப்பாசன குளங்களின் துரித அபிவிருத்திக்கான திட்டத்தின் கீழ் அவசியமான உடனடி நடவடிக்கைக்கென  சேதமடைந்துள்ள நாகபடுவான் குளம் அணைக்கட்டின் நிலமை தொடர்பில் அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் நேரில் சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

6 கிலோ மீற்றர் நீளமான இந்த குளத்தின் அணைக்கட்டு பல இடங்களில் பலத்த மழை காரணமாக அரிப்புக்கு உள்ளாகி அணைக்கட்டு  அடித்துச் செல்லப் பட்டுள்ளதாக  கமக்காரர் அமைப்பின் நிர்வாகிகளால் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்துக்காக கொண்டுவரப்பட்ட  நிலையிலேயே ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் நேரடியாக விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில் கரியாலை, பண்டிவெட்டி, நாகபடுவான் ஆகிய மூன்று குளங்களை இணைத்து ஒரு அணைக்கட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட இக்குளத்தில் இருந்து சிறுபோக நெல் செய்கைக்காக 500 ஏக்கர் வயல் நிலத்துக்கு நீர் பாய்ச்சப்படுகிறது.

இக் குளத்தின் அணைக்கட்டு மேலும் இரண்டு அடி உயரத்துக்கு புனரமைக்கப்படும்  பட்சத்தில் மேலும் 500 ஏக்கர் நிலத்திற்கு பாசனத்தை விஸ்தரிக்க முடியும் என சோலை கமக்காரர் அமைப்பின் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்..

அத்துடன் அணைக்கட்டின் சிறு திருத்த வேலைகளுக்காக நிதியை ஒதுக்குவதில் எந்த பலனும் இல்லை எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று காலபோக மழைக்கு முன்னர் அணைக்கட்டை புனரமைக்க தவறின் குளம் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலமையை எதிர் கொள்ள நேரிடும் என பிரதேச விவசாயிகள் பலரும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: