நீதிபதி இளஞ்செழியனின் மெய்க்காப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு  மேற்கொண்ட சந்தேக நபர்களுக்கு பிணை!

Monday, November 19th, 2018

முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்க்காப்பாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் நல்லூரில் வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்திருந்த நிலையில் ஒருவர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம்சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்திருந்த நிலையில் சம்பவத்துடன் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபகள் மூவரும் இரண்டு 5 லட்சம் ரூபா ஆள்பிணை உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் விடுக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts:

பாடசாலை மாணவர்களுக்கான உயர் போஷாக்கை கொண்ட அரிசி - கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்!
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு தடுப்பு ஊசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு...
தோழர் தவநாதனின் தாயாராது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரிய...