ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்டில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பு – கல்வி அமைச்சர் தகவல்!

Monday, July 12th, 2021

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் இன்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு வலயத்திற்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 42 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

000

Related posts: