தவறான செயற்பாடுகள் காரணமாக 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன – பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!

Wednesday, May 25th, 2022

பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களை சிலர் மிரட்டியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவோதுன்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த நிரப்பு நிலையங்களுக்கான அனைத்து எரிபொருள் ஓடர்களும் இரத்து செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறான மிரட்டல் மற்றும் கட்டுக்கடங்காத நடத்தைகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது ஐந்து தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக நாவோதுன்ன மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற பொதுமக்கள் ஆதரவு அளிக்காவிட்டால், மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

அனைத்து பாதுகாப்பு முன்னெடுப்புகளுடன் நாளை ஆரம்பமாகின்றது உயர்தரப் பரீட்சைகள் – இன்றையதினம் வெற்றிகர...
பிளாஸ்டிக் பொலித்தீன் தடைக்கு மாற்று வழிமுறைகளை கண்டறிய நனோ தொழில்நுட்பம் அவசியம் - அமைச்சர் மஹிந்த ...
கொரோனா தொற்றால் இதுவரை 40 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 5 ஆயிரத்து 500 பேருக்கும் தொற்றுறுதி என சுகாதார ...