கொரோனா அறிகுறிகளைக் கொண்டவர்கள் இரத்த தானம் செய்ய வேண்டாம் – தேசிய இரத்த மாற்று சேவைகளின் பணிப்பாளரான வைத்தியர் அறிவறுத்து!

Saturday, August 14th, 2021

கொரோனா அறிகுறிகளைக் கொண்டவர்கள், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் மற்றும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் இரத்த தானம் செய்ய வேண்டாம் என தேசிய இரத்த மாற்று சேவைகளின் பணிப்பாளரான வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.,

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கொரோனா வைரஸ் இரத்தத்தால் அல்லது அதன் கூறுகளால் பரவுகிறது என்பது குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனினும் தொற்றாளர்களிடமிருந்து வைத்தியசாலை ஊழியர்களுக்கு பரவுவதைத் தடுக்கும் வகையிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரத்தத்தை சேகரிக்கும் போது ஐந்து தொற்று நோய்களை அடையாளம் காணும் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த ஏழு நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசியைப் பெற்ற நபர்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்படாது,

ஏனெனில் இந்தச் சோதனை முடிவுகளை தடுப்பூசி பாதிக்கலாம் என அவர் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் குருதியைச் சேகரிப்பதில் நாம் சிக்கல்களை எதிர்நோக்குகின்றோம்.

ஆகையால் அனைவரும் இரத்த தானம் செய்ய முன்வருமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். தேசிய இரத்த மாற்று சேவை சுகாதார சேவைகளுக்கு இடையூறு இல்லாமல் சேவைகளை வழங்கியுள்ளது.

பொது இரத்ததானம் செய்வதற்காக 24 மணிநேர ஹொட்லைன் இலக்கமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பொது மக்கள் அருகிலுள்ள இரத்ததான மையங்களில் இரத்த தானம் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: