பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!

Tuesday, July 28th, 2020

பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நாளைகாலை 7.30 முதல் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்தையின் ஊடாக தமக்கான தீர்வு கிடைக்கும் எதிர்பார்ப்பதாக அவர்கள் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், தமக்கு சட்டரீதியான அதிகாரம் வழங்கப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்  இதன்போது குற்றம் சாட்டினர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளதுடன் இன்று தொடர்ந்தும் 11 ஆவது நாளாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: