யாழ். பொது நூலகத்திற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க  நூல்களை அன்பளிப்புச் செய்த கனடிய வெளிவிவகார அமைச்சர்!

Friday, July 29th, 2016

கனடா நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க 50 நூல்கள் கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோனால் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை(29) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குறித்த குழுவினர் இன்று யாழ். பொது நூலகத்திற்கும் விஐயம் மேற்கொண்டனர்.

இதன் போதே மேற்படி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பொது நூலகத்திற்கு வருகை தந்திருந்த வாசகர்களுடனும்,மாணவர்களுடனும் சிநேகபூர்வ கலந்துரையாடலிளும் அவர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

5d4a19a5-eeb5-46e0-8b11-704749f2f81d

63d3d176-1794-4160-850d-7a5480d86ac5

a5284356-dcdc-4af4-b3d3-e2925e864e94

Related posts: