ரயில்வே திணைக்களத்தின் இடைக்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் – ரயில்வே பொது முகாமையாளர்!

Tuesday, March 7th, 2017

 

ரயில்வே திணைக்களம் இடைக்கால அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் பீ.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் ரயில் பாதையைப் புனரமைப்பதற்காக இருவழிப் பாதையை நிர்மாணித்தல், பழமைவாய்ந்த சமிக்ஞை கட்டமைப்பிற்குப் பதிலாக புதிய கட்டமைப்பைப் பொருத்துதல், காலங்கடந்த பழைய 200 ரயில் பெட்டிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

பழைய பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் பொருத்தப்படுகின்றன. இரத்மலானை, தெமட்டகொட ரயில் நிலையங்களை நிர்வகித்தல், தொழிற்சாலை, மற்றும் பிரிவுகளை விரிவுபடுத்துதல் ஆகியனவும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திணைக்களம் கொண்டுள்ள ரயில் எஞ்சின்களில் 55 வீதமானவை 30 வருடங்கள் பழமை வாய்ந்தவையாகும்.

250 ரயில் பெட்டிகள் சுமார் 25 வருட காலம் பழமை வாய்ந்ததாகும். இதன் காரணமாக புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கடனுதவியின் கீழ் 10 ரயில் எஞ்சின்களும், ஆறு அதிவேக எஞ்சின்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்கான உடன்படிக்கை சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டன. இவற்றுக்காக 100 மில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.

எதிர்வரும் ஒன்றரை வருட காலப்பகுதியில் இவை சேவையில் இணைத்துக் கொள்ளப்படுமென்று ரயில்வே பொதுமுகாமையாளர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts: