வைத்தியர்களிடம் கோரிக்கை!

Friday, May 20th, 2016

நாட்டிலேற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவது தற்போதுள்ள அத்தியாவசிய தேவையாக உள்ளதால் வைத்தியர்கள் இக்காலப்பகுதியில் விடுமுறை பெறுவதையோ அல்லது விடுமுறையை நீடிப்பதையோ தவிர்த்து கொள்ளவேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரச வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு அண்மையில் வாழும் வைத்தியர்கள் தற்போது விடுமுறை பெற்றிருப்பார்களாயின் அவர்களை உடனடியாக மீள பணிக்கு திரும்புமாறும் அச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

தொழில்சார் நிபுணர்கள் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவ்வமைப்பின ஊடக பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts:

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களை போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க நடவடிக்க...
பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூரணமடைந்துள்ளது - பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் ...
கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை வழங்கியது இந்திய...