ஏற்றத் தாழ்வுகளற்ற எதிர்காலத்தை உருவாக்குவதே ஈ.பி.டி.பியின் நோக்கமாகும் – யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஜீவன் தெரிவிப்பு!

Monday, May 1st, 2023

தான் எடுத்தக்கொண்ட பாதை வழியை எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை தடம்புரளாது தொடர்ந்து வருவதால்தான் இன்று ஏழை எழிய மக்களின் வாழ் ஒளிபெற முடிந்தது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் அவரது நோக்கம் நிச்சயம் அதன் அடைவு மட்டத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மே தின கூட்டங்கள் இம்முறையும் வழமைபோன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் அந்தந்த மாவட்டங்களின் கட்சி நிர்வாக பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

குறிப்பாக வடக்கில் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்றது.இதில் யாழ் மாவட்டத்தில் இன்றையதினம் பிற்பகல் 2 மணியளவில் கட்சின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரது தலைமையில் ஆரம்பமானது

ஆரம்ப நிகழ்வாக உழைப்பாளர்கள் சமூகத்திற்காக அர்ப்பணங்கள் செய்த உழைப்பாளர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வின் ஆரம்ப அங்கமாக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமை உரை நிகழ்த்தியிருந்தார்.

அவர் தனது தலைமை உரையில் –

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் அதன் தலைவரும் ஆரம்பகாலம் முதல் அதாவது அகிமிசை வழி போராட்ட காலத்திலும் சரி ஆயுத வழிமுறையூடான போராட்ட காலத்திலும் சரி அரசியல் ஜனநாயக வழிமுறையான நாடாளுமன்ற  வழியூடாகவும் சரி மக்களின் எதிர்காலம் அவர்களது உழைப்பின் முக்கியத்துவம் ஆண்பெண் பேதங்களற்ற பன்முக சமத்துவம் ஏற்றத் தாழ்வுகளற்ற எதிர்காலத்தை உருவாக்கல் உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தியே தனது செயற்பாடுகளை செய்து வந்துள்ளது.

இதில் தான் எடுத்தக்கொண்ட பாதை வழியை எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை தடம்புரளாது தொடர்ந்து வருவதால்தான் இன்று ஏழை எழிய மக்களின் வாழ் ஒளிபெற முடிந்தது என்றும் சுட்டிக்காட்டிய அவர் பாமர மக்கள் எத்துறையிலும் சாதிக்கவல்லவர்கள் என்ற நிலைய உருவாக்கி இலங்கையில் புரட்சிகரமான வேற்றுமையற்ற சூழ்நிலை உன்றை உருவாக்கி காட்டியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

000

Related posts: