நிலக்கரி விநியோகஸ்தர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு தீர்க்கப்பட்ட பின்னரே நிலக்கரி விநியோகம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, September 12th, 2022

நிலக்கரி விநியோகஸ்தர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டரீதியாக தீர்க்கப்படும் வரையில் விநியோகம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில், நிலக்கரியினை விநியோகிப்பதற்கு விலை மனுவினை பெற்றுக்கொண்ட விநியோகஸ்தர்கள் மீது இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியினை பெற்றுக்கொள்வதற்காக, விநியோகஸ்தர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை தீர்க்கும் நோக்கில் வலுசக்தி அமைச்சருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை சட்டரீதியாக தீர்ப்பது மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பிலான மாற்று யோசனைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வடக்கு மாகாணசபையின் ஆட்சி காலம் முடிகிறது - ஈ...
பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பே கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை - யாழ். இராணுவக் கட்டளைத...
ஒன்றுகூடல் நிகழ்வுகள் அதிகரிப்பால் ஆபத்து - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!