முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை அமுல்படுத்த தவறிவிட்டார் – வன்முறைகளுக்கு அடக்கு முறை தான் தீர்வு எனவும் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, September 12th, 2022

முன்னாள் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ச வன்முறைக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று நிலைமை மாறியிருக்கும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

”இப்போது அனைவரும் அடக்குமுறை பற்றி பேசுகிறார்கள். வீடு எரிந்தால், அந்த நபரை கைது செய்ய வேண்டும், தெருவில் ஒருவர் கொல்லப்பட்டால், அவர்கள் மீது சட்டத்தை செயல்படுத்த வேண்டும், அவர்களுக்கு எதிராக சட்டம் செயல்படுத்தப்படாவிட்டால், எங்கள் அன்பு பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, நாங்கள் ஒருபோதும் முன்னேற மாட்டோம்.

இந்த நாட்டில் ஒழுக்கத்தை நிலைநாட்ட முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதைச் செய்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன், ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. வன்முறையை முன்னெடுப்பவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வன்முறையைப் பரப்புபவர்களுக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.

ஆனால் அந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் நிறைவேற்றி வருகின்றமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. எனக்கு போராட்டத்தால் பிரச்சனை இல்லை, ஆனால் அந்த போராட்டக்காரருக்கும், போராட்டத்தை வழிநடத்திய அமைப்புக்கள் மீது தான் பிரச்சனை. இன்றைய வன்முறைக்கு ஒரே தீர்வு அடக்குமுறைதான் என நாமல் ராஜபக்ச நேற்று முன் தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: